உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கப்பலில் வேலை என நம்பி ரூ. 75,000 இழந்த துாத்துக்குடி வாலிபர் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை பார்த்து ஏமாந்த சோகம்

கப்பலில் வேலை என நம்பி ரூ. 75,000 இழந்த துாத்துக்குடி வாலிபர் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை பார்த்து ஏமாந்த சோகம்

துாத்துக்குடி:துாத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் பிரிசிலன், 22. கப்பல் வேலை தொடர்பாக படித்திருந்த பிரிசிலன் அதற்கான வேலை தேடிக்கொண்டிருந்தார். இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியான ஒரு விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார்.அவர்கள் கேட்டுக் கொண்டபடி, ஜி பே மூலம் இரண்டு தவணையாக பிரிசிலன் ரூ. 75,000 அனுப்பி உள்ளார். தொடர்ந்து, அவர்கள் இ மெயில் மூலம் ஒரு நியமன ஆணையை வழங்கி உள்ளனர். விசாரித்ததில், அது போலியானது என தெரியவந்தது.இதுகுறித்து, பிரிசிலன் துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவா துறைமுகத்தில் நிற்கும் கப்பலில் வேலை என கூறி எனது ஆவணங்களை அனுப்பும்படி கேட்டனர். அதை சரிபார்த்த பிறகு ஒரு கம்பெனியின் அப்ரூவல் கடிதத்தையும், பணி நியமன கடிதமும் இ-மெயிலில் அனுப்பினர். தொடர்ந்து, 05.06.2024 அன்று முதற்கட்டமாக முத்துகுட்டி சந்தானம் என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு இரண்டு தவணையாக 75,000 ரூபாய் G -Pay மூலம் அனுப்பினேன்.நியமன ஆணை தொடர்பாக கம்பெனியில் விசாரித்த போது அவை அனைத்தும் போலி என தெரியவந்தது. என்னை தொடர்பு கொண்ட அலைபேசி எண்கள் (8890878369, 8218437326) தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி வேலைக்காக பணம் கட்டினேன். நான் ஏமாந்தது போல வேறு ஏமாறக்கூடாது. சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ