மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
கயத்தாறு:கயத்தாறு அருகே எரிந்த நிலையில் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள கரிசல்குளம் விலக்கு பகுதியில் பெண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுகா தேவி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன் மற்றும் போலீசார் சென்றனர். அந்த இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடங்களை சேகரித்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இறந்த பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்து எரிக்கப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் சி.சி.டி.வி., பதிவிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025