மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் யூனியனுக்குட்பட்ட காயாமொழி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 2019ல் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரன் 1,071 ஓட்டுகளும், முரளிமனோகர் 1,070 ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையின் போது, முறைகேடு நடந்ததாக முரளிமனோகர் தரப்பினர் புகார் தெரிவித்தனர்.மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கோர்ட் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து, பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராஜேஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்தார். மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த கோர்ட் உத்தரவிட்டது.திருச்செந்துார் யூனியன் அலுவலகத்தில் காயாமொழி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் தேர்தலுக்கான மறு ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. முடிவில், ராஜேஸ்வரன் 1069 ஓட்டுகளும், முரளி மனோகர் 1068 ஓட்டுகளும் பெற்றனர். 105 ஓட்டுகள் செல்லாதவை. ராஜேஸ்வரன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மறு ஓட்டு எண்ணிக்கையிலும் முறைகேடு நடந்ததாக முரளி மனோகர் தரப்பினர் நேற்று தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:கடந்த முறை ஓட்டு எண்ணிக்கையின்போது 100 ஓட்டுகள் செல்லாதவை எனக் கூறினர். தற்போது, அதில் 5 ஓட்டுகள் கூடியுள்ளது. வேண்டும் என்றே முரளிமனோகருக்கு கிடைத்த ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025