மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லுாரில், நாட்டிலேயே முதன்முறையாக தொல்லியல் அகழாய்வு பணிகள் நடந்தது. அப்போது, கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் அதே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில், உலகத்தரம் வாய்ந்த சைட் மியூசியம் அமைக்கப்பட்டது.இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட சைட் மியூசியத்தை காண தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சைட் மியூசியம் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஓலை கூரை நேற்று முன்தினம் சூறைக்காற்றில் சேதமடைந்தது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் பகுதியில் ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்டிருந்த குழிகளை பாதுகாக்க கூரைகள் அமைத்து பணிகள் நடந்து வந்தன. தற்போது அகழாய்வு பணிகள் முழுமையும் முடிந்த நிலையில், மற்ற குழிகள் அனைத்தும் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.நேற்று முன்தினம் திடீரென வீசிய சூறைக் காற்றின்போது ஆதிச்சநல்லுார் சைட் மியூசியம் அருகே அமைக்கப்பட்டிருந்த கூரை ஷெட் கீழே விழுந்தது. அந்த சமயத்தில் யாரும் அங்கு இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் அருகே உள்ள கூரைகளும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதிக்கு பணியாளர்களை நியமனம் செய்து, ஓலை கூரைகளை பராமரிக்க வேண்டும்.மியூசியத்தை பார்வையிட வரும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025