உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புனித வெள்ளி: தேவாலயத்தில் பதநீர் வழங்கிய கிறிஸ்துவர்கள்

புனித வெள்ளி: தேவாலயத்தில் பதநீர் வழங்கிய கிறிஸ்துவர்கள்

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபக்கூட்டங்கள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பர நகரில் அமைந்துள்ள பேதுருவின் ஆலயத்தில் (CSI) பனைத் தொழில் செழிக்க, பதநீர் மற்றும் கருப்பட்டி நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டி புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பனை மரத்திலிருந்து எடுத்து வரப்படும் பதநீரை ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ