மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்திற்கு வந்தார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு, நேற்று காலை காரில் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார்.கோவில் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் வள்ளி குகை பின்புறம் உள்ள மண்டபத்தில் அமைச்சர் சண்முகம் சிறப்பு பூஜை செய்தார். பின்னர், கோவிலுக்குள் சென்ற அவர், மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காரில் ஆறுமுகநேரி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025