உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கே.எப்.சி., உணவக உரிமம் ரத்து

கே.எப்.சி., உணவக உரிமம் ரத்து

துாத்துக்குடி:துாத்துக்குடி, வேலவன் ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில், கே.எப்.சி., சிக்கன் உணவகம் செயல்படுகிறது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் அங்கு ஆய்வு செய்தனர்.அதில், உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத 'மெக்னீசியம் சிலிகேட்- சிந்தடிக்' என்ற உணவு சேர்மத்தை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த 18 கிலோ மெக்னீசியம் சிலிகேட் - சிந்தடிக் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், அதைப் பயன்படுத்தி துாய்மைப்படுத்தப்பட்ட 45 லிட்டர் பழைய உணவு எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. முன்தயாரிப்பு செய்து, 12 மணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தாமல் இருந்த, 56 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:பொது சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில், இருப்பு பதிவேட்டிலேயே குறிப்பிடப்படாமல் தனியாக மெக்னீசியம் சிலிகேட் - சிந்தடிக் என்ற உணவு சேர்மத்தை இருப்பு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய எண்ணெயை துாய்மைப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.அதுகுறித்து விசாரணை நடத்தும் வகையில் கே.எப்.சி., உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமமானது இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ