மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, அந்தோணி தேன் தெனிலா என்பவர்களுக்குச் சொந்தமான விசைப்படகுகளில் 22 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் 22 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்தனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் ஆழ்கடல் மீன்படி விசைப்படகு சங்க நிர்வாகிகள் நேற்று துாத்துக்குடி கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகளில் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் 22 பேரையும் மீட்க மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிடிபட்ட இரண்டு விசைப்படகுகளும் இந்திய கடல் எல்லைக்குள்தான் இருந்துள்ளன. இலங்கை கடற்படையினர்தான் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வலையை மீனவர்கள் பயன்படுத்தவில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025