உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்; பவுர்ணமி வழிபாடு கோலாகலம்

திருச்செந்துார் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்; பவுர்ணமி வழிபாடு கோலாகலம்

தூத்துக்குடி : ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் இரவு திருச்செந்துார் கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் தங்கிவழிபட்டனர்.திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் பவுர்ணமி இரவில் தங்கி வழிபாடு மேற்கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பவுர்ணமியன்று கடற்கரையில் தங்கி சமுத்திர அபிஷேகம் வழிபாடு மேற்கொள்வதோடு அதிகாலையில் கடலிலும் நாழிக் கிணற்றிலும் குளிப்பதால் மனநிறைவும் செல்வ செழிப்பும் ஏற்படும் என பக்தர்களிடையே நம்பிக்கை பரவுகிறது. வடமாவட்டங்களை சேர்ந்த ஜோதிடர்கள் இதனை வலியுறுத்துகின்றனர். இதனால் நேற்று முன்தினம் இரவில் ஆடி பவுர்ணமி வழிபாட்டிற்காக இங்கு கடற்கரையில் பக்தர்கள் கூடினர். நேற்று கோயிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசித்தனர். வழக்கமாக திருச்செந்துாருக்கு கந்த சஷ்டி மற்றும் வைகாசி விசாகத்தன்று மட்டுமே அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி