உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி மினி பஸ்களில் கூடுதல் கட்டணத்திற்கு எதிர்ப்பு

கோவில்பட்டி மினி பஸ்களில் கூடுதல் கட்டணத்திற்கு எதிர்ப்பு

கோவில்பட்டி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் பெரும்பாலான மினி பஸ்களில், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. குறைந்தபட்ச கட்டணமாக இரண்டு ரூபாய் என அரசு நிர்ணயம் செய்துள்ள நிலையில், 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், 'மினி பஸ்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும்; அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, ஐந்தாவது துாண் என்ற அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் நேற்று திடீர் போராட்டம் நடந்தது.மினி பஸ்சை மறித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அதிக கட்டணம் வசூலிக்கும் மினி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி