உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / முயல் வேட்டை 5 பேர் கைது

முயல் வேட்டை 5 பேர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காட்டுப் பகுதியில் முயல் வேட்டை அதிகரித்து வருகிறது. வனத்துறை ஊழியர்கள் கேசவன், பிரசன்னா, பாலகுமார், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வனக்காவலர் ராமசாமி ஆகியோர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். கோவில்பட்டி அருகே கரிசல்குளம் காட்டுப்பகுதியில் ஒரு கும்பலை கைது செய்து விசாரித்தனர். ஆறு வேட்டை நாய்கள் உதவியுடன் முயல் வேட்டை நடத்துவதை ஒப்புக் கொண்டனர்.கைது செய்யப்பட்ட கோவில்பட்டி அருகே துறையூரைச் சேர்ந்த பெருமாள், 65, முத்துகுமார், 44, கட்டபொம்மன், 32, மணிகண்டன், 41, கார்த்திகேயன், 30 ஆகிய 5 பேரையும் போலீசில் ஒப்படைத்தனர்.அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த 6 முயல்களின் உடல், 6 வேட்டை நாய்கள், டாடா சுமோ கார், டாடா ஏஸ் ஆட்டோ ஆகியவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை