| ADDED : ஜூலை 16, 2024 11:22 PM
துாத்துக்குடி,: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன் 54. இவர் பொதுமக்களிடம் வீடு, மனை அப்ரூவலுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக தகவல் வெளியானது. டி.எஸ்.பி., பீட்டர் பால் மற்றும் போலீசார் விளாத்திகுளம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். செயல் அலுவலர் மகேஷ்வரன் அறையிலிருந்தும், அவரது டிரைவர் மாரிச்செல்வத்திடம் இருந்தும் கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 500 ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். செயல் அலுவலர், டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.