உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் பீடி இலை பறிமுதல்

இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடத்திய படகு கடலில் தரை தட்டி நின்றதால் போலீசார் பறிமுதல் செய்தனர்.துாத்துக்குடி அருகே மேட்டுப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் 2 டன் எடையுள்ள பீடி இலை பண்டல்களை கடத்தினர். ஆனால் தாழ்வான பகுதியில் சென்றபோது படகு தரை தட்டி நின்றது. அதன்பின் படகை மீட்க முடியாத நிலையில் அதனை இயக்கியவர்கள் தப்பிச் சென்றனர். மரைன் போலீசார் அதிலிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். கடத்திய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை