உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ. 10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் திருச்செந்துாரில் இருவர் கைது

இலங்கைக்கு படகில் கடத்த இருந்த ரூ. 10 லட்சம் பீடி இலைகள் பறிமுதல் திருச்செந்துாரில் இருவர் கைது

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடற்கரை கிராமமான ஆலந்தலையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு பீடி இலைளை கடத்த திட்டமிடுவது குறித்து கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் சென்னை பதிவெண் கொண்ட வேன் நின்றது. அதில் 42 மூடைகள் பீடி இலைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 10 லட்சம். இலங்கைக்கு அவற்றை கடத்த முயன்ற ஆலந்தலையைச் சேர்ந்த ராஜா 29, தூத்துக்குடியைச் சேர்ந்த டிரைவர் பாலமுருகன் 35, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பீடி இலைகள், வேன் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்