உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குடிநீர் வழங்கவில்லை பெண்கள் திடீர் மறியல்

குடிநீர் வழங்கவில்லை பெண்கள் திடீர் மறியல்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிவந்திபட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட கரிசல்குளம் கிராமத்தில், 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதிகளுக்கு, 10 தினங்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், கோவில்பட்டி -- பசுவந்தனை சாலையில் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். கொப்பம்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:கரிசல்குளம் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. 'மோட்டார் பழுது' என கூறி ,அடிக்கடி குடிநீர் வினியோகத்தை நிறுத்தி விடுகின்றனர். அதை சரி செய்து, நிரந்தரமாக குடிநீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை