உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல்

தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது: மத்திய அரசு மீது கனிமொழி எம்.பி., சாடல்

துாத்துக்குடி: துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.,நேற்று, துாத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் சென்றபடி நன்றி தெரிவித்தார். முன்னதாக, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: துாத்துக்குடி மாவட்ட நீட் தேர்வு மையங்களில் இரண்டு வகையான வினாத்தாள் வழங்கிய குளறுபடி குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வழி வகை செய்யப்படும்.விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி இனிமேல் தான் தொடங்கும். மறுபடியும் பரிசீலனை செய்து அனைவருக்கும் வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு குறைத்து வழங்கி உள்ளது. இது குறித்து துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் கூறுவோம். பார்லிமென்ட்டில் குரல் எழுப்பி கோரிக்கை வைப்போம். தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.தமிழகத்துக்கு பலமுறை வந்த பிரதமர் மோடி, மாநில அரசின் கோரிக்கை எதையும் கேட்கவில்லை. ஜி.எஸ்.டி.,யில் தமிழகத்துக்கு வர வேண்டிய நிலுவை தொகையையும், வெள்ள நிவாரண தொகையையும் தரவில்லை. மற்ற மாநிலங்களுக்கு விரைந்து வழங்குவதுபோல, தமிழகத்துக்கு நிதி தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KR
ஜூன் 14, 2024 07:17

Thenji pona record. We will do nothing constructive, but just do unfounded attacks on union government all the time. Useless to have such people elected as MPs


சோலை பார்த்தி
ஜூன் 13, 2024 23:15

உங்க அண்ணன் ஜெயிச்சதும் போடுறதா சொன்ன முதல் கையெழுத்து ஏன் இன்னும் போடல...


Maheesh
ஜூன் 13, 2024 19:22

கடந்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டிற்கு எந்த கேபினட் அமைச்சரும் கிடைக்கவில்லை. இனி ஐந்து வருடங்களுக்கும் எந்த கேபினட் அமைச்சரும் கிடையாது. அடுத்த முறையும் உங்களுக்கு போட்டால் இதே மாதிரி சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இருக்காது. புதிதாக வரும் தொழில்கள் இருக்கட்டும் ஆனால் இருக்கும் தொழில்களே ஆந்திரா பீகாருக்கு சென்று விடும் போலிருக்கிறது. சந்திரபாபு நாயுடு வருடத்திற்கு நாலு லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்குவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். புதிதாக தொழில்கள் எதுவும் கண்டுபிடித்து இவ்வளவு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. தமிழ்நாட்டில் இருந்து கோயம்புத்தூர் சிவகாசி திருப்பூர் என இங்கிருக்கும் தொழில்களை அங்கு இழுக்க பார்ப்பார்கள். முடிந்தால் அதை காப்பாற்றி கொடுங்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 13, 2024 18:13

ஊழல் செய்வதில் திமுக விண்வெளியில் உள்ள கருந்துளை போன்றது எவ்வளவு பணம் எப்படி எல்லாம் திமுகவின் ஆட்சியில் கரைந்து காணாமல் போய் விடுகிறது. 40 க்கு 40 ஜெயித்த பலனை தமிழக மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர்.


thavasi
ஜூன் 13, 2024 10:45

enga da innum indha dialogue varalaye nu paathen.


Sivakuamar Panneerselvam
ஜூன் 13, 2024 08:31

ஆமாம் கனியக்கா. தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் கோலோச்சி பணத்தை கொண்டாட முடியலையே... வருத்தம் இருக்காதா ....


A Viswanathan
ஜூன் 13, 2024 20:32

ரஜினிகாந் சொல்லியதை போல் இனி ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது போல் தோன்றுகிறது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை