மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
துாத்துக்குடி:துாத்துக்குடியில் வீட்டுக்குள் தாயின் உடலை புதைத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.துாத்துக்குடி அய்யனடைப்பு சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஜெயின் உலாபுதீன். டிரைவர். இவரது மறைவுக்குப் பிறகு மனைவி ஆஷா பைரோஸ், மகன் முகம்மது குலாம் காதருடன் 27, தனியே வசித்து வந்தார்.சில நாட்களாக பைரோஸ் வீட்டு பகுதியில் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரித்தனர். இதில் ஆஷா பைரோஸ் மே 2ல் உடல் நலம் பாதித்து இறந்து விட்டார். உறவினர்கள் யாரும் இல்லாததால் வீட்டு காம்பவுண்டுக்குள் குழிதோண்டி புதைத்ததாக காதர் தெரிவித்தார். ஆஷா பைரோஸ் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். முகமது குலாம் காதரும் மனவளர்ச்சி குறைந்தவர் என தெரிகிறது. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் இன்று உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள சிப்காட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025