மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
திருச்செந்துார்:திருச்செந்துார் பொது திரிசுதந்திரர்கள் ஏற்பாட்டில் சுப்பிரமணியசுவாமிக்கு ஆண்டுதோறும் சுக்லபஷ்ச சஷ்டி அன்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் கடந்த 44 ஆண்டுகளாக வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தொடர்ந்து 45வது ஆண்டான இந்த ஆண்டும் நேற்று சுக்லபட்ச சஷ்டியை முன்னிட்டு உலக நன்மைக்காக அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். இதையொட்டி திருச்செந்துார் சிவன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிவன் கோவில் முன்பிருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டு உள்மாடவீதி, ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக சுப்பிரமணியசுவாமி கோவிலை சென்று சேர்ந்தனர் இதனைத்தொடர்ந்து கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மாலையில் ஏராளமான பக்தர்கள் கோவில் கடற்கரையில் அக்னி காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை திருச்செந்துார் பொது திரிசுதந்திரர்கள் செய்திருந்தனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025