டவுன் பஞ்., தலைவர் மகன் விபத்தில் பலி; நண்பர் காயம்
துாத்துக்குடி; கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில், தி.மு.க., டவுன் பஞ்., தலைவர் மகன் உயிரிழந்தார்.துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் டவுன் பஞ்., தலைவர் தி.மு.க.,வைச் சேர்ந்த அயன் சூரியராஜ். அவரது இளைய மகன் செல்வம், 28, தன் நண்பரான ஸ்ரீராம், 33, என்பவருடன் கோவில்பட்டியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.கோவில்பட்டி -- எட்டையபுரம் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற டிராக்டர் திடீரென திரும்பியதால், அதன் மீது பைக் மோதியதில், சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்தார். காயமடைந்த ஸ்ரீராம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாலாட்டின்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.