மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில், 1,000த்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். சிலருக்கு, அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், தங்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகள் சிலர் கூறியதாவது:குடும்பமும், சமுதாயமும் ஒதுக்கிய நிலையில் பாதுகாப்பு இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு வாடகைக்கு கூட யாரும் வீடு தருவதில்லை. அப்படியே தந்தாலும் சில மாதங்களில் காலி செய்ய கட்டாயப்படுத்தி அனுப்பி விடுகின்றனர்.எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர், இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, கலெக்டர் அலுவலக புகார் பெட்டியில் மனுவை போட்டுச் சென்றனர்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025