உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோவிலில் மே 22ல் வைகாசி விசாக விழா

திருச்செந்துார் கோவிலில் மே 22ல் வைகாசி விசாக விழா

துாத்துக்குடி:திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் 22ல் நடக்கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, மே 21ல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரணை நடக்கிறது.தொடர்ந்து, விசாக திருவிழாவான மே 22ல், அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10:30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.மே 23ல் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10:30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை