உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விளாத்திகுளத்தில் தீண்டாமை சுவர்?

விளாத்திகுளத்தில் தீண்டாமை சுவர்?

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் பட்டியலின மக்களும், வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். இங்கு, பட்டியலின மக்களை பிரித்து வைக்கும் வகையில், தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த அரசு புறம்போக்கு நிலத்தை, தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் துணையுடன் பட்டா மாற்றப்பட்டு கம்பி வேலி அமைத்து, 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக, சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருந்ததாவது:சங்கரலிங்கபுரத்தில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும். பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தில், போலியாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும். அங்குள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும்.மக்களை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை அகற்ற, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ