உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  கொரோனா தந்த பகை; தொழிலதிபர் கொலை: தந்தை, மகன் கைது

 கொரோனா தந்த பகை; தொழிலதிபர் கொலை: தந்தை, மகன் கைது

துாத்துக்குடி: துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, ஆலடியூரை சேர்ந்த தங்கராஜ், 75, துபாயில் நெல்லை சரவணா ஸ்டோர் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். சொந்த ஊரில் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுவது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் ஆலடியூர் வந்தார். டிச., 8 இரவு ஆலடியூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த தங்கராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஏரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கொலை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த மூக்காண்டி, 68, அவரது மகன் ரமேஷ், 32, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மூக்காண்டி மகன் ஒருவர் துபாயில் தங்கராஜ் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் அவர் இறந்து போனதால், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாத நிலை ஏற்பட்டு, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. இதனால், தங்கராஜ் மீது கடுமையான கோபத்தில் இருந்த மூக்காண்டி, தன் இளைய மகன் ரமேஷ் என்பவருடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை