உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வேப்பலோடை அரசு பள்ளியில் இருபெரும் விழா

வேப்பலோடை அரசு பள்ளியில் இருபெரும் விழா

குளத்தூர் : வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் இருபெரும் விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழா மற்றும் புரவலர் சேர்க்கை விழா ஆகிய இருபெரும் விழாவிற்கு மதுரை மண்டல கருவூலத்துறை துணை இயக்குநர் துரைகணேசன் தலைமை வகித்தார். வேப்பலோடை அன்னை தெரசா கிராம பொது நலச்சங்க தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை எழில்ராணி தேசிய கொடியேற்றி வைத்து பேசினார். விழாவில் மாணவ, மாணவிகள், தேச தலைவர்கள் மற்றும் தேச ஒற்றுமை குறித்து பேசினர். வேலூர் வி.ஐ.டி.பல்கலைக் கழக விரிவுரையாளர் நந்தகோபால், வேப்பலோடை பஞ்.,துணை தலைவர் சந்தனம், பாலகிருஷ்ணன், ஆறுமுகச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் குணவதி ஜேம்ஸ், பள்ளி புரவலர் நிதியை தலைமையாசிரியையிடம் வழங்கினார். அறிவியல் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்