உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது

 எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது

துாத்துக்குடி: போலீஸ் பெண் எஸ்.எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மெட்டில்டா என்பவரின் கணவர் ஜேம்ஸ் சித்தர், 54. நேற்று முன்தினம் சொந்த ஊரான திருப்பணி புத்தன்தருவை கிராமத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தட்டார்மடம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஜேம்ஸ் சித்தர் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜேக்கப் தங்கபாண்டி, 44, என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'ஜேம்ஸ் சித்தர் நிலத்தின் அருகே ஜேக்கப் தங்கபாண்டிக்கும் விவசாய நிலம் உள்ளது. அந்த இடத்தில் கம்பி வேலி அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கத்தியால் ஜேம்ஸ் சித்தரின் தொடையில் குத்திவிட்டு ஜேக்கப் தங்கபாண்டி தப்பினார். இதில், அதிக ரத்தம் வெளியாகி அவர் உயிரிழந்தார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை