மேலும் செய்திகள்
போதையில் இளைஞர் கொலை: பூசாரி கைது
01-Dec-2024
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அனவரதநல்லுார் சந்தனமாரிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன், 35, கட்டட தொழிலாளி. இவருக்கு, 31, வயதில் மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.மகாராஜன், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார், 19, என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்துக்குமார், அரிவாளால் மகாராஜனை வெட்டி தப்பியோடி விட்டார். காயமடைந்த மகாராஜன், சம்பவ இடத்திலேயே இறந்தார். முறப்பநாடு போலீசார்,முத்துக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
01-Dec-2024