உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / லேப் டாப் வழங்க தாமதம் ரூ.15,000 இழப்பீடுக்கு உத்தரவு

லேப் டாப் வழங்க தாமதம் ரூ.15,000 இழப்பீடுக்கு உத்தரவு

துாத்துக்குடி:வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட நாளில் லேப்டாப் வழங்காத கடை உரிமையாளர், 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துராம் என்பவர், துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரில் உள்ள ஒரு கடையில் லேப் டாப் கம்ப்யூட்டர் வாங்க சென்றார். தேர்வு செய்த லேப் டாப் மாடலுக்கு, 35,000 ரூபாய் அட்வான்ஸ் தொகையாக அவர் செலுத்தினார். 'மூன்று நாட்களில் லேப் டாப் டெலிவரி செய்யப்படும்' என, உறுதி அளித்த கடை உரிமையாளர், முழு தொகையையும் செலுத்துமாறு கூறினார். ஆனால், குறிப்பிட்ட நாளில் லேப்டாப் வழங்கப்படாததால் வேறு கடையில் முத்துராம் லேப் டாப் வாங்கினார். குறிப்பிட்ட காலத்திற்குள், லேப்டாப் வழங்காத கடைக்காரருக்கு, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியும், அவர் உரிய பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முத்துராம் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாய் என, மொத்தம், 15,000 ரூபாயை ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை