உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மனைவியை கொன்றவர் விஷம் குடித்து தற்கொலை

மனைவியை கொன்றவர் விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் இன்னாசிமுத்து 56. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மருதம்மாள் 54. ஜன.3 இரவில் இருவருக்கும் குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இரவில் மனைவி மருதம்மாளை வெட்டிக் கொலை செய்துவிட்டு இன்னாசிமுத்துவும் விஷம் அருந்தியிருந்தார். மறுநாள் காலையில் மருதம்மாளின் தம்பி மருது அவர்களின் வீட்டுக்கு சென்றார். கதவு திறக்கப்படாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மருதம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கிருந்த இன்னாசிமுத்து அரிவாளால் மருதுவை வெட்டி விட்டு தப்பி ஓடினார். மருது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் இன்னாசிமுத்துவை கைது செய்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்