உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நாசரேத் அருகே கொடிமரத்தில் புனித நீர்

நாசரேத் அருகே கொடிமரத்தில் புனித நீர்

நாசரேத் : நாசரேத் அருகே கத்தோலிக்க தேவாலய கொடிமரத்தில் புனித நீர் வடிவதை ஆர்வமுடன் கிராம மக்கள் பார்வையிட்டு கொடடும் நீரை பிடித்து செல்லும் அதிசயம் நடந்துள்ளது.நாசரேத் அருகிலுள்ள தோப்பூர் கிராமத்தில் பழமைவாய்ந்த புனித லூர்து அன்னை கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் திருவிழா பிப்ரவரி 2ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும். திருவிழா காலங்களில் கொடியேற்றுவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்குமுன் புதிய கொடிமரம் கான்கிரிட்டால் உயரமான இரும்புகம்பி மூலம் நிறுவப்பட்டுள்ளது. இக்கொடிமரத்தில் நேற்று மதியம் தெளிந்த நீர் சொட்டு சொட்டாக வடிந்தது. இந்தநீரை ஊர்மக்கள் பிடித்து தங்களது நோய்கள் இருக்கும் இடத்தில் பூசினர். இதில் ஒரு வயதான மூதாட்டி இந்த நீரை பூசியதால் நடக்கமுடியாமல் கஷ்டப்பட்டது நீங்கி நன்றாக நடப்பதாக ஊர் மக்கள் கூறினர்.மேலும் நேரம் ஆக ஆக கொடிமரத்தில் நீர் வடிவதை அருகிலுள்ள கிராம மக்கள் குடும்பமாக பார்த்து நீரை பிடித்து சென்றனர். இது குறித்து சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக்குரு எட்வர்ட் ஜே யிடம் கேட்ட போது தோப்பூர் புனித லூர்து மாதா ஆலயக் கொடிமரத்தில் புனித நீர் வடிவதாக இறைமக்கள் சொன்னதின் பேரில் இன்று கொடிமரத்தை பார்வையிட செல்கிறேன். அதன்பின்னரே நான் கருத்து கூற முடியும் என்றார். இது குறித்து சம்பந்தப்பட்ட பங்குதந்தை ராஜா அடிகளாரிடம் கேட்டபோது, தோப்பூர் புனித லூர்து மாதா ஆலயக் கொடிமரத்தில் புனித நீர் வடிவதாக இறைமக்கள் சொன்னதின் பேரில் நேற்று மாலை 5 மணியளவில் கொடிமரத்தை பார்வையிட சென்றேன். கொடிமரத்தில் இருந்து வடியும் நீரை பிடித்து வைக்க சொல்லியிருக்கிறேன் பின்னரே கருத்து கூற முடியும் என்றார். கொடிமரத்தில் புனிதநீர் வடிவதை ஆர்வமுடன் கிராம மக்கள் பார்வையிட்டு கொட்டும் நீரை பிடித்து செல்லும் அதிசயம் நாசரேத் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரபை உருவாக்கியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி