மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., 2 ஏட்டு சஸ்பெண்ட்
02-Feb-2026
40 சதவீதம் விலை உயர்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்
29-Jan-2026 | 1
கடல் அலையில் சிக்கிய 3 சிறுவர்கள் உயிரிழப்பு
27-Jan-2026
கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!
26-Jan-2026
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பஸ்சில் பயணம் செய்தபோது ஒருவரிடம் தகராறு செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டி அருகேயுள்ள கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் சுப்பையா(53). இவர் கோவில்பட்டி டூ அகிலாண்டபுரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அதே பஸ்சில் இடைசெவல் கேன்டீனில் இறங்க வேண்டிய மூவர் பயணம் செய்ததாகவும், அவர்கள் சுப்பையா மீது இடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பையா தட்டிக் கேட்டபோது மூவரும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுப்பையா நாலாட்டின்புதூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நாலாட்டின்புதூர் போலீசார் கயத்தாறு ஹைவே பெட்ரோல் போலீசாருக்கு தகவல் கொடுத்து பஸ்சில் சென்ற மூவரையும் போலீஸ் ஸ்டேசன் கொண்டு வந்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் சத்திரப்பட்டி காலனி அருளப்பன் மகன் செல்வகுமார்(29), அய்யனாரூத்து பெரியசாமி மகன் மந்திரமூர்த்தி(24), வடக்கு சுப்பிரமணியபுரம் ஆறுமுகம் மகன் சரவணக்குமார்(24) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நாலாட்டின்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் வழக்கு பதிவு செய்து தகராறு செய்ததாக மூவரையும் கைது செய்து கோவில்பட்டி ஜேஎம்1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
02-Feb-2026
29-Jan-2026 | 1
27-Jan-2026
26-Jan-2026