உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / சிந்தலக்கரை பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம்

சிந்தலக்கரை பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம்

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே எஸ்ஆர்எம்எஸ் பள்ளியில் மாதிரி லோக்சபா கூட்டம் நடந்தது பள்ளி தாளாளர் ராமமூர்த்தி சுவாமி தலைமை வகித்தார். பள்ளி செயலர் திருக்குமரன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். தொடர்ந்து எட்டயபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொன் பால்துரை கலந்து கொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதையடுத்து மாணவ மாணவிகள் லோக்சபா கூட்ட நடவடிக்கைகளைப்போல் எதிர்கட்சி ஆளுங்கட்சி விவாதம், மற்றும் பிரதமர் பதிலுரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நடத்தினர். ஆசிரியை ஆண்டனிதெரசா இன்ஸன்றா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர் பவானி, பள்ளி முதல்வர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் திருமேனி, ஆசிரியை பரிதாபானு மா ணவ மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ