உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 276 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 276 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டியதாக 276 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மாவட்டம் முழுவதும் நடந்த வாகனசோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டியதாக 276 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதில் 250 பேர் மீது லோக்கல் போலீசாரும், 26 பேர் மீது நெடுஞ்சாலைதுறை வாகன போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதாக 35 பேர் மீதும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 111 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி நகர பகுதியில் இந்த நேரங்களில் கூடுதலாக போலீஸ் ரோந்து பணியை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி