உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தெய்வச்செயல்புரம் பலசரக்கு கடையில் கொள்ளை முயற்சி

தெய்வச்செயல்புரம் பலசரக்கு கடையில் கொள்ளை முயற்சி

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தில் பலசரக்கு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(42) இவர் அங்கு பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் இரவு வியாபாரத்தை முடித்துகொண்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். வழக்கம்போல் காலையில் ராஜகோபால் மனைவி கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் உள்ள காய்கறி கூடை மட்டும் இடம் மாறியிருந்தது. மற்றப்படி கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போகாமல் அப்படியே இருந்தது. இது குறித்து ராஜகோபால் புதுக்கோட்டை போலீசில் புகார் தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி கடையின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிகரமாக பூட்டை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை