உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / உளவுத்துறை கண்காணிப்பில் வருவாய்த்துறை அலுவலகங்கள்

உளவுத்துறை கண்காணிப்பில் வருவாய்த்துறை அலுவலகங்கள்

புதூர் : வருவாய்த்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உளவு பிரிவு போலீசார் கண்காணித்து அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரேஷன் கார்டு முதல் முதியோர் உதவி தொகை உட்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வருவாய்த்துறை மூலம் நடந்து வருகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் பயனாளிகள் தேர்வு செய்வது முதல் வினியோகம் வரை புரோக்கர்கள் தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து 20 தினங்களுக்கும் மேலாக தாலுகா அலுவலகங்களில் நலத்திட்ட பிரிவு வாரியாக உளவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதில் புரோக்கர்களின் முகவரி, அவர்களுக்கு உதவி செய்யும் அலுவலர்கள், அதிகாரிகள், புரோக்கர்கள் மூலம் பயனடைந்த பயனாளிகள் பட்டியல் போன்ற பல விபரங்களை சேகரித்து சென்னை தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி