உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இந்திய கம்யூ., கிளை மாநாடு

இந்திய கம்யூ., கிளை மாநாடு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இந்திய கம்யூ., கிளை மாநாடு நடந்தது. மாநகர செயலாளர் அர்ஜூனன் மாநாட்டை துவக்கி வைத்தார். கிளைச்செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆண்டு வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். கிளை உறுப்பினர் மனோகரன், ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய செயலாளராக முத்துகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் கலந்துகொண்டு பேசினார். மாநாட்டில் பிரையண்ட் நகர் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை திட்டம் முடிந்து பல நாட்கள் ஆகியும் தார்சாலை போடாமல் இருப்பதை கண்டித்தும், குடிதண்ணீர் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் முன்பு இருந்ததுபோல் 3 நாளைக்கு ஒரு முறையாவது தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி