உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குளத்தூர் டூ கீழவைப்பார் ரோட்டில் முட்புதர்களை அகற்ற கோரிக்கை

குளத்தூர் டூ கீழவைப்பார் ரோட்டில் முட்புதர்களை அகற்ற கோரிக்கை

குளத்தூர் : குளத்தூர் டூ கீழவைப்பார் ரோட்டிலுள்ள முட்புதர்களை அகற்றி ரோட்டை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குளத்தூர் அருகே உள்ள கல்லூரணி, எஸ்.வி.புரம், அகமதுபுரம், சிப்பிகுளம் மற்றும் கீழவைப்பார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் அன்றாட வேலைகளுக்காகவும் தினமும் குளத்தூர் வந்து செல்ல வேண்டியுள்ளது. மே லும் விளாத்திகுளம், கோவில்பட்டி, மதுரை போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் இக்கிராம பொதுமக்கள் குளத்தூர் வந்துதான் செல்ல வேண்டும். இதற்காக இப்பொதுமக்கள் குளத்தூர் டூ கீழவைப்பார் ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கல்லூரணி பகுதியிலுள்ள உப்பு தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் வாகன ஓட்டிகளும் இந்த ரோட்டையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோடு தற்போது முட்புதர்கள் நிறைந்து போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கில்லாத நிலையில் உள்ளது. ரோட்டின் இருபுறமும் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால் குகை போன்று தோற்றமளிக்கிறது. எனவே இந்த வழியாக இயக்கப்பட்டு வந்த இரண்டு மினி பஸ்களில் ஒன்று நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் மற்றொரு பஸ் இந்த வழியே செல்ல முடியாமல் பனையூர் வழியே சுற்றி செல்வதால் கால விரயமாவதோடு எரிபொருளும் விரயமாகிறது. இதனால் மற்றொரு மினி பஸ்சும் நிறுத்தப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குளத்தூர் டூ கீழவைப்பார் ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை