மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஆத்தூர் : பழையகாயலில் விவசாயியை கத்தியால் குத்திய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவங்காடு வடக்குத்தெரு சக்திவேல் மகன் வேலுமணி(32) விவசாயி ஆவார். அதே பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் மாரிக்கண்ணு (எ) முத்துகிருஷ்ணன்(29) கூலித்தொழிலாளி. இருவருக்குமிடையே சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட தகராறில் இருந்து பேச்சுவார்த்தை இல்லை. இந்த நிலையில் 5ம் தேதி இரவு பழையகாயல் பஜாரில் நின்று கொண்டிருந்த வேலுமணியை ஜாடையாக முத்துகிருஷ்ணன் திட்டியுள்ளார். இதை வேலுமணி தட்டிக் கேட்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை முத்துகிருஷ்ணன் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வேலுமணி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கென சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆத்தூர் எஸ்.ஐ.,பேச்சிமுத்து, விவசாயியை கத்தியால் குத்திய முத்துகிருஷ்ணனை கைது செய்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் விவசாரணை நடத்தி வருகிறார்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025