உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் அக்.6ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. காளி வேடம் அணியும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் துவங்கினர். குலசேகரன்பட்டணம் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. இத்திருவிழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருவர். நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை பிரிப்பார்கள். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுக்களும், மேளம், டிரம் செட், குறவன், குறத்தி, கும்பாட்டம், குரூப் டான்ஸ், போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். எனவே தசரா நாட்களான 10 நாட்களும் எங்கு பார்த்தாலும் தசரா பக்தர்களே காட்சியளிப்பார்கள். இச்சிறப்பு மிக்க தசரா திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் அக்.6ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. காளி, அம்மன், தீ சட்டி எடுப்பவர்கள் 41 நாள், 31 நாள், 21 நாள் என கடும் விரதம் மேற்கொள்வார்கள். இவ்வாறு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கடலில் குளித்துவிட்டு கோயில் பூசாரி மூலம் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வார்கள். மதியம் மட்டும் பச்சரிசி சாதம் உட்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்வார்கள். மேலும் தசரா திருவிழாவையொட்டி காளி வேடத்திற்கான சடைமுடி, கிரீடம், சூலாயுதம் போன்ற பொருட்களின் தயாரிப்பும் உடன்குடி பஜாரில் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ