உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / முன்பயண திட்டப்படி செவிலியர்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு

முன்பயண திட்டப்படி செவிலியர்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி : கிராம சுகாதார செவிலியர்கள் முன் பயண திட்டப்படி அந்தந்த கிராமங்களுக்கு சென்று கர்ப்பணி பெண்களை பரிசோதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் எச்சரிக்கை விடுத்தார். தூத்துக்குடி யூனியன் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆஷீஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தினசரி சிகிச்சைக்காக எவ்வளவு பேர் வருகின்றனர் என்பதை கேட்டார். புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்களுக்கு என்ன நோய் என கண்டறிந்து எழுதும் பதிவேட்டில் அதற்கு கொடுக்கப்படும் மருந்து குறித்தும் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் அங்குள்ள ஆய்வு கூடத்தை கலெக்டர் பார்வையிட்டார். நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை விபரத்தை கேட்டார். அதற்கு டாக்டர்கள் பதில் அளித்தனர். ஹெச்.ஐ.வி உள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களை என்ன செய்வீர்கள் என்று கலெக்டர் கேட்டதற்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஹெச்.ஐ.வி கூட்டு மருத்துவ சிகிச்சை மையத்திற்கு பரிந்துரைக்கப்படும் என்று டாக்டர்கள் கூறினர். இதனை தொடர்ந்து தாய்சேய் நலவிடுதிக்கு சென்ற கலெக்டர் அங்கிருந்த கிராம சுகாதார செவிலியர்கள் அவர்களின் முன் பயண திட்டப்படி அந்தந்த கிராமங்களுக்கு சென்று அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் முறையாக அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கின்றனரா என்பதை கேட்டறிந்தார். தாய்சேய்நல அட்டை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் எடுக்கப்படும் பரிசோதனைகள் குறித்து அட்டையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்த கலெக்டர், அப்போது தான் அந்த அட்டையின் உதவியுடன் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்றார். 5 ஆண்டுகள் வரை அந்த அட்டையை பயன்படுத்த முடியும் என்பதால் பிறக்கும் குழந்தைக்கு மேற்கொண்ட பரிசோதனைகள் மற்றும் போடப்பட்ட தடுப்பூசி விபரங்களையும் விடுபட்டு விடாமல் அதில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். பின்னர் சித்தா பிரிவில் ஆய்வு மேற்கொண்ட அவர் தினமும் எவ்வளவு நோயாளிகள் வருகின்றனர். போதிய அளவிற்கு சித்த மருந்து கையிருப்பில் இருக்கிறதா என்று கேட்டார். ஸ்டாக் இருப்பதாக சித்தா பிரிவினர் கூறினர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கழிவறைகள் வசதி, அதில் போதிய தண்ணீர் வசதி எப்போதும் இருக்க வேண்டும். கழிவறைகள் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். டாக்டர் செல்வி, பி.ஆர்.ஓ சுரேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் வேப்பலோடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு புரபோசல் ரெடி பண்ண உத்தரவிட்டார். நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார். டாக்டர்கள் ஆனிமரிய விஷிலா, டாக்டர் புனிதவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி