மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
ஸ்ரீவைகுண்டம் : புதுடெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான தூத்துக்குடி துறைமுக இன்ஜினியரின் உடல் சொந்த ஊரான ஆழ்வார்கற்குளத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. புதுடெல்லி ஹைகோர்ட் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்தில் 11 பேர் பலியாயினர். இந்த கோரசம்பவத்தில் துறைமுக பொறுப்புகழக வழக்கு விஷயமாக டெல்லிக்கு சென்ற தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக இன்ஜினியர் பத்ரன் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இந்நிலையில் அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்கற்குளத்தி ற்கு ö க õண் டுவர ப்பட் ட து. அங்கு அவருடைய உடலுக்கு துறைமுகபொறுப்புக் கழக தலைவர் சுப்பையா, உறுப்பினர்கள் விஜயசீலன், பெரியசாமி, கதிர்வேல், மணி, மக்கள் தொடர்பு அதிகாரி சேக்முன்னா, வஉசி.,துறைமுக பொறுப்பு கழக அதிகாரிகள் சங்கம், அரசியல் கட்சி சார்பில் ஜான்பாண்டியன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மத்திய அமைச்சர் வாசன் ஆறுதல் : மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் வாசன் போனில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவருடைய குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், வாரிசு வேலையும் தரப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பத்ரனின் உட லை பார்த்து அவரது மø னவி, மகன் மற்றும் உற வினர்கள் கதறி அழுதது கண்களை குளமாக்கியது.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025