உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு திமுக.,வேட்பாளர் மனுதாக்கல்

கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு திமுக.,வேட்பாளர் மனுதாக்கல்

கோவில்பட்டி : கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு போட்டியிட திமுக.,வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். கோவில்பட்டி நகராட்சி சேர்மன் பதவிக்கு திமுக.,சார்பில் போட்டியிட இந்துமதி கவுதமன் அறிவிக்கப்பட்டார். இவரது வேட்புமனு திமுக.,மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கோவில்பட்டி நகர திமுக.,அலுவலகத்திலிருந்து வேட்பாளருடன் புறப்பட்ட திமுக.,வினர் நகராட்சி அலுவலகம் வந்தனர். தொடர்ந்து சேர்மன் வேட்பாளர் இந்துமதி கவுதமன் வேட்பு மனுவை மாவட்ட செயலாளர் பெரியசாமி, நகர செயலாளர் ராமர், முன்னாள் எம்பி.,ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன் ஆகியோருடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. இதை தேர்தல் நடத்தும் அலுவலர் கமிஷனர் மூர்த்தி, உதவி தேர்தல் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜாராம், கவுன்சிலர்கள் தவமணி, ராஜகுரு, திமுக.,பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishnaswamy Balasundaram
செப் 07, 2025 15:44

கண்மூடித்தனமா பைக்கை ஓட்டுனா சாவு நிச்சயம். இந்த மாதிரி இளைஞர்களை கடவுள் அழைத்து புத்தி சொல்வார்.


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி