உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடியில் தீ விபத்து : குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

தூத்துக்குடியில் தீ விபத்து : குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் 2 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. தூத்துக்குடி அண்ணாநகர் அடுத்து இராஜகோபாலபுரம் உள்ளது. இந்த பகுதி 7ம் தெருவில் முட்செடிகள் தீப்பிடித்து எரிந்தது. அப்போது அங்கு வீசிய பலத்த காற்றினால் அருகில் இருந்த பாஞ்சாலி, ஜெயா ஆகியோரது குடிசை வீடுகளுக்கு தீ பரவியது. இதனயடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். எனினும் தீயை அணைக்கமுடியாததால் தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி ராஜூ தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டேபிள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்