உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிமாணவர்களுக்கு பிசியோதெரபி தசை பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிமாணவர்களுக்கு பிசியோதெரபி தசை பயிற்சி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 900 மாணவ, மாணவிகளுக்கு பிசியோதெரபி செக்கப் நேற்று முன்தினம் நடந்தது. சி.வ பள்ளியில் சி.இ.ஓ பரிமளா துவக்கி வைத்தார்.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கால் வலி, நடக்கும் போது வலி, கீழே அமரும் போது வலி உள்ளிட்ட கோளாறுகள் இருந்தால் அவற்றை ஆரம்பத்திலே சீர் செய்யும் வகையில் அரசு சார்பில் இலவசமாக மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற சோதனை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது.இதன்படி தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் தூத்துக்குடி சி.வ பள்ளியிலும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நாலாட்டின்புதூர் பள்ளியிலும் நேற்றுமுன் தினம் இதற்கான சிறப்பு முகாம் நடந்தது. சி.வ மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை முதன்மை கல்வி அதிகாரி பரிமளா துவக்கி வைத்தார்.மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித்துணை ஆய்வர் சங்கரய்யா, சுற்றுச்சூழல் அலுவலர் பேச்சிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு முதலில் எடை, உயரம் போன்றவை பார்க்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு நடக்கும் போது வலி உள்ளதா, கை, கால் வலி இருக்கிறதா, உட்காரும் போது ஏதாவது வலி இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.அப்படி ஏதாவது வலி போன்றவை இருந்தால் அதனை எக்சசைஸ் மூலம் எப்படி குணப்படுத்த வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. வலி உள்ள இடங்களில் அதனை குணமாக்க பிசியோதெரபி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 200 பேருக்கும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 700 மாணவ, மாணவிகளுக்கும் இயன்முறை மருத்துவ தசைப் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக சி.இ.ஓ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்