மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
தூத்துக்குடி:அண்ணா பிறந்த நாளை ஒட்டி இன்று திமுக சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளை ஒட்டி திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தியும், அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க செய்து பெரிய அளவில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்த இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9 மணிக்கு பல்வேறு போட்டிகள் நடக்கிறது. போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். போட்டியை மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி துவக்கி வைக்கிறார். முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இது தவிர சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் நடக்கும் போட்டியில் சிறப்பிடம் பெறுவோர் மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று திமுக இளைஞரணி வட்டாரங்கள் தெரிவித்தன.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025