உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கல்லூரி மாணவி விஷம் குடிப்பு

கல்லூரி மாணவி விஷம் குடிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; முத்தையாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவரது மகள் சௌமியா செல்வம். இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷம் குடித்த மாணவியின் தந்தை பாமக., பிரமுகர் என கூறப்படுகிறது. இது குறித்து முத்தையாபுரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இவர் எதற்காக விஷம் குடித்தார் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை