உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை விளாத்திகுளம் பகுதியில் ரோடுகள் படுமோசம்

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை விளாத்திகுளம் பகுதியில் ரோடுகள் படுமோசம்

விளாத்திகுளம் : விளாத்திகுளம் பகுதியில் விளாத்திகுளம் டூ குளத்தூர், சூரங்குடி டூ எட்டையபுரம் முக்கிய ரோடுகள் உட்பட பெரும்பாலான ரோடுகள் போக்குவரத்துக்கே லாயகற்ற நிலையில் உள்ளது. ஆட்சி மாறினாலும் இந்த ரோடுகளுக்கு இதுவரை விமோஜனம் பிறக்கவில்லையே என பொதுமக்கள் புலம்புகின்றனர். விளாத்திகுளம் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அதிகளவில் போக்குவரத்து நிறைந்த விளாத்திகுளம் டூ குளத்தூர் மற்றும் சூரங்குடி டூ எட்டையபுரம் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோடுகளில் அதிகளவில் மணல் லாரிகள் செல்வதாலும், ரோடுகள் தரமில்லாமல் போடப்பட்டிருந்ததாலும் கடந்த ஆண்டு பெய்த மழையினாலும், போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்த ரோடுகளின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. கடந்த ஆண்டே இந்த ரோடுகள் சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த ரோடுகள் சீரமைக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இதுவரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லையே என புலம்புகின்றனர். இந்த முக்கிய ரோடுகள் மட்டுமல்லாமல் விளாத்திகுளம் பகுதியில் பெரும்பாலான ரோடுகள் நிலைமையும் மிகவும் மோசமாகவே உள்ளது. மழை காலம் நெருங்கிவரும் வேளையில் ரோடுகள் மேலும் மோசமாகிவிடும் என்பதால் பயணிகள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை