உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மனைவியை கொன்ற கணவர் குடும்ப தகராறு காரணமா?

மனைவியை கொன்ற கணவர் குடும்ப தகராறு காரணமா?

கோவில்பட்டி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் இன்னாசிமுத்து, 56, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி மருதம்மாள், 54. இவர்களது மகள் விமலாதேவி, சென்னையில் அரசு டாக்டராக பணி புரிகிறார்.கணவன்- - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை, விமலாதேவியின் தம்பி சின்ன மருது, அக்கா வீட்டுக்கு சென்றார். கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மருதம்மாள் அரிவாளால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். இன்னாசிமுத்து அங்கு இருந்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர், சின்ன மருதுவை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். காயமடைந்த சின்ன மருது, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்னாசிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ