உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ஜெயக்குமார் கொலை விசாரணை சரியான பாதையில் செல்கிறது

ஜெயக்குமார் கொலை விசாரணை சரியான பாதையில் செல்கிறது

திருப்பத்துார்:''நெல்லை, காங்., மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலையில், விசாரணை சரியாக செல்கிறது. உண்மையான குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்,'' என, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.திருப்பத்துாரில் , காங்., நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டதில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில், நான்காம் கட்ட தேர்தலுக்கு பின் மோடியும், அமித் ஷாவும் கொந்தளித்து கொண்டிருக்கின்றனர். டெல்டா மாவட்ட விவசாயிகள், 110 பேர் வாரணாசிக்கு தேர்தலில் போட்டியிட சென்றனர். அவர்கள் திருச்சியில் ரயிலில் ஏறினர். ஆனால், செங்கல்பட்டில் போலீசார் கீழே இறக்கி உள்ளனர். இது சர்வாதிகார ஆட்சி என்பதை, பா.ஜ., அரசு நிருபித்து வருகிறது.மோடி அரசு, விவசாயிகளை வாரணாசியில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டும். அவர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். மக்களின் பிரதமராக ராகுல் விளங்குகிறார். தமிழக முதல்வரும், ராகுல் தலைமை ஏற்க வாருங்கள் என்றார். காங்., மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை விசாரணை சரியாக செல்கிறது. உண்மையான குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இன்னும், சில நாட்களில் உடற்கூறு ஆய்வு அறிக்கை வரவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை