| ADDED : ஜூலை 26, 2024 01:15 AM
ஜோலார்பேட்டை:ஜோலார்பேட்டை அடுத்த எம்.ஜி.ஆர்., நகர் கருப்பனுாரை சேர்ந்தவர் சூர்யா, 16. இவர், திருப்பத்துாரிலுள்ள அரசு பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பியவர் விளையாட சென்றார். அதை, தந்தை சாமுவேல் கண்டித்தார்.பின், மனைவியுடன் வெளியே சென்ற சாமுவேல், வீடு திரும்பியபோது சூர்யாவை காணாமல் தேடினார். அப்போது வீட்டின் மாடியில், மகன் சூர்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.