உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வாலிபர் கைது

பெண் எஸ்.ஐ.,யை தாக்கிய வாலிபர் கைது

ஆம்பூர்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் கிராம எட்டியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா இரு மாதங்களாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை, கோவில் வளாகத்தில் பாட்டு கச்சேரி நடந்தது. அதே கிராமத்தை சேர்ந்த கணேசன், 28, மது போதையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.ஐ., லட்சுமியை கன்னத்தில் அறைந்தார். நிலை குலைந்த லட்சுமியை, அருகில் இருந்தவர்கள் மீட்டனர். உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை